இரவு நேரத்தில் மோசமாக பேசுவார்கள் : வெளிச்சத்துக்கு வந்த நடிகை மைனா நந்தினி பெயரிலான மோ சடி!!

7973


நடிகை மைனா நந்தினிபிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியின் போலி பேஸ்புக் கணக்கால் இரவு நேரத்தில் தனது தூக்கத்தை தொலைத்ததோடு, பல்வேறு அவஸ்தைகள் பட்டதாக அரசியல் பிரமுகர் குமுறியுள்ளார்.தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் குருநாதன். இவர் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி பெயரில் போலி பேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர்கள், அந்த பக்கத்தில் குருநாதனின் செல்போன் நம்பரைப் பதிவேற்றியுள்ளனர்.


இது மைனா நந்தினியின் செல்போன் நம்பர் என நினைத்துப் பலரும் இரவு பகல் பாராமல் குருநாதனுக்கு போன் செய்திருக்கின்றனர்.

முக்கியமாக தினமும் இரவு 10 மணியை கடந்தால் போதும் குருநாதன் பிசியாகி விடுவார். அந்த அளவிற்கு அடுத்தடுத்து அவரது செல்போனுக்கு வரும் அழைப்புகள் அணிவகுத்து நிற்கும் என கூறப்படுகின்றது.


எதிரில் பேசுவது ஆண் மகனா, பெண் மகளா என்பதை கூட அறியாமல், எடுத்த வேகத்தில் மைனா, நீங்கள் ரொம்ப அழகாக தேவதை மாதிரி இருக்கீங்க என்று தேவையில்லாத அழைப்புகள் உள்நாடு மட்டும் அல்ல வெளி நாடுகளில் இருந்தும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் என்கிறார் குருநாதன்.

4 மாதங்களாக இந்த கொ டுமையை அனுபவித்த குருநாதன் பொறுமையிழந்து பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், இரவு நேரத்தில் ஏதோ அவசர போன் அழைப்பு என நினைத்து எடுத்தால், நடிகையைக் கேட்டு மோசமாக பேசி நோகடிக்கிறார்கள், இவர்களால் பல நாள் தூக்கம் போனது, முக்கிய அழைப்பு வரும் என்பதால் போனையும் அணைத்து வைக்க முடியவில்லை. உடனடியாக அந்த பக்கத்தில் உள்ள என் போன் நம்பரை நீக்கவேண்டும் என கோரியுள்ளார்.