அவுஸ்திரேலியாவின் பிக்பேஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியின் லசித் மலிங்க இதுவரை நாடு திரும்பவில்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
பிக்பேஸ் போட்டிகளில் மலிங்க, டில்ஷான் மற்றும் மென்டிஸ் ஆகியோர் பங்கேறறுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அணி தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளதால் லசித் மாலிங்க மற்றும் அஜந்த மென்டிஸ் ஆகியோரை நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கெட் அழைப்பு விடுத்திருந்தது.
மென்டிஸ் நாடு திரும்பியுள்ள நிலையில், மலிங்க இன்னமும் நாடு திரும்பவில்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.





