இப்படியும் ஒரு பரிதாப வாழ்க்கை!!

584

Life

வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வட இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கிராமத்தில் மருத்துவ வசதியோ, வாகன வசதியோ கிடையாது.

இந்த கிராமத்தில் கருத்தரிக்கும் பெண்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டுமானால் சடார் என்னும் ஆற்றின் வழியாக 45 மைல் அதாவது 9 நாட்கள் நடந்தே பயணம் செய்ய வேண்டும்.

மேலும் குளிர்காலங்களில் இந்த ஆறானது உறைந்த நிலையில் இருக்கும், அந்த நேரங்களில் இவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.

9 நாட்கள் பயணத்திற்கு பின்னர் மருத்துவமனையை அடைந்ததும், குழந்தையை பெற்றெடுத்து விட்டு வீடு திரும்புகையில் மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.

அவ்வாறு அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தையை இரவில் கம்பளி போர்வையிலும், பகலில் கூடையிலும் வைத்து பாதுகாத்து கொண்டு பயணிக்கின்றனர்.

இரவு நேரங்களில் குகைகளில் தீயை மூட்டி அனலின் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றனர், மேலும் பயண நேரங்களில் உணவிற்காக தாங்கள் சேமித்து வைத்த உணவுகளை உண்டு பசியாற்றிக்கொள்கின்றனர்.