கல வரத்தால் நின்றுபோன இந்துப் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைத்த இஸ்லாமியர்கள்!!

266

நெகிழ்ச்சி சம்பவம்

டெல்லியில் இரு கு ழுவினருக்கு இடையே நடைபெற்ற க லவரத்தால் நின்றுபோன இந்து பெண்ணின் திருமணத்தை இஸ்லாமியர்கள் நடத்தி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வரும் பகுதியை சேர்ந்த சாவித்ரி பிரசாத் (23) என்பவருக்கு, கடந்த 24ம் திகதியன்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குடியுரிமை சட்டதிருத்தத்தை எ திர்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோ தல் க லவரமாக மாறியது.

இந்த சம்பவத்தில் 38 பேர் உ யிரிழந்ததோடு, நூற்றுக்கும் அதிகமானோர் ப டுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான கடைகள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவத்தால் திருமணத்தை தள்ளி வைக்குமாறு மணமகனின் குடும்பத்தினர் அ ழுத்தம் கொடுத்தனர். இதனால் மருதாணி வைத்து திருமணத்திற்கு ஆசையுடன் தயாராக இருந்த சாவித்ரி, வீட்டில் அ ழுதுகொண்டே இருந்துள்ளார்.

ஆனால் நிலைமை மோ சமாகிக்கொண்டே இருந்ததால், செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை. திருமணம் செவ்வாய்க்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை மாற்றப்பட்டது.

இருப்பினும், ஊ ரடங்கு உத்தரவு மற்றும் பெரும்பாலான சந்தை இடங்கள் மூடப்பட்டிருந்ததால் மணமகனும் அவரது உறவினர்களும் மணமகளின் திருமணத்திற்கு வருவது மிகவும் ஆ பத்தானது. எனவே சாவித்திரியின் தந்தை திருமணத்தை மேலும் ஒத்திவைக்க முடிவு செய்தார்.

சாவித்ரியின் குடும்ப அவலநிலை குறித்து அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்களுக்குத் தெரிய வந்ததும், மணமகனின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு பா துகாப்பு கொடுப்பதாக உறுதியளித்து திருமணத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்படி அக்கம்பக்கதை சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி, சாவித்ரிக்கு புதன்கிழமையன்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.