இலங்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 898 வெளிநாட்டவர்கள்!!

543

வெளிநாட்டவர்கள்..

இலங்கையில் விசா இன்மை மற்றும் வேறு காரணங்கள் காரணமாக 898 வெளிநாட்டவர்கள் இருந்து நாடு க டத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நாடு க டத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் 54 பெண்களும் உள்ளடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவ்வாறு நாடு க டத்தப்பட்டவர்களில் இந்தியர்கள், சீன நட்டவர்களே அதிகமானவர்கள் என தெரியவந்துள்ளது. கடந்த வருடம் இந்திய நாட்டவர்கள் மாத்திரம் 597 பேர் நாடு க டத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட சீனர்களின் எண்ணிக்கை 147 ஆகும்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 39 பேரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 பேரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.