அடுத்தடுத்து உ யிரிழந்த தா ய், த ந்தை : அக்காவை கவனித்து கொள்ள 15 வயது தம்பி எடுத்த க ண்ணீர் முடிவு!!

413

15 வயது தம்பி..

இந்தியாவில் தா ய் மற்றும் த ந்தை அடுத்தடுத்து உ யிரிழந்ததால் ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி அக்காளை கவனிக்க சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் க ண்ணீரை வரவழைத்துள்ளது.

மைசூர் மாவட்டம் ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு அனுஷா (17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார்.

சிறுவன் ஆகாஷ் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இதனால் மஞ்சுளா-குமார் தம்பதி அனுஷாவை கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், குமாரும் அடுத்தடுத்து உ யிரிழந்தனர். தாய், தந்தையை இழந்த அனுஷாவும், ஆகாசும் ஆதரவற்றனர்.

தான் பள்ளிக்கு சென்றால், அக்காளை கவனிக்க முடியாதே என கருதிய ஆகாஷ் தனது பள்ளி படிப்பை திடீரென்று பாதியில் நிறுத்தினான். இதுபற்றி தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரியவந்தது.

இதைதொடர்ந்து மஞ்சுநாத் சிறுவன் ஆகாஷிடம் விசாரித்தார். அப்போது தனது தாய், தந்தை இ றந்துவிட்டதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள அக்காளை பார்க்க ஆள் இல்லை எனவும், எனவே அக்காளை கவனிப்பதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் அவன் தெரிவித்தான்.

இதைகேட்டு அ திர்ச்சி அடைந்த தாசில்தார் மஞ்சுநாத், சிறுவன் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், அவனது அக்காளை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவனிடம் உறுதி அளித்தார்.

இதுகுறித்து தாசில்தார் மஞ்சுநாத் கூறுகையில், தாய், தந்தையை இழந்ததால் ஆகாசும், அவனது சகோதரி அனுஷாவும் ஆதரவில்லாத நிலையில் உள்ளனர். அனுஷா மூளைவளர்ச்சி குன்றியவர் ஆவார். அவரை பராமரிக்க மைசூருவில் உள்ள கருணாலயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு சார்பில் ஆகாஷ்- அனுஷாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.