வரதட்சணை வேண்டாம்… உங்கள் மகள் இது மட்டும் செய்தால் போதும் : ஆச்சரியபட வைத்த கலெக்டர்!!

633

ஆச்சரியபட வைத்த கலெக்டர்..

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் மணப்பெண் வீட்டாரிடம் வித்தியாசமாக வரதட்சணை கேட்டு திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். பொறியல் படிப்பு முடித்த இவர், அதன் பின் ஐஐடியில் எம்.டெக் முடித்த பின்பு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியம் எழுந்துள்ளது.

இதனால் பிற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகளை எல்லாம் துறந்தார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் போது, தாய்-தந்தையார் ஆடு, மாடு மேய்த்து அதில் கிடைத்த வருமானத்தில் தான் படித்து வந்துள்ளார்.

அதன் பின் நண்பர்களும் அவர் படிப்பதற்கு உதவியுள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான போதும் செல்போன் ரீ-சார்ஜ் கடையில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2018-ல் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்தார்.

இதையடுத்து இவருக்கு திருமணத்திற்கான வரன்கள் பார்க்கப்பட்டது. ஆனால் எத்தனையோ வரன்கள் வந்தும், அவர் சேவை செய்யும் மருத்துவர் தான் வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் படி இவர் கடந்த 26-ஆம் திகதி இவர் டாக்டர்.கிருஷ்ணபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னதாக மணப்பெண் வீட்டாரிடம் சிவகுரு வரதட்சனை என்ற அடிப்படையில் விதித்த நிபந்தனை, திருமணத்திற்கு பிறகு வாரத்தில் 2 முறை, நான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்தை சுற்றியிருக்கும் கிராமத்தில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதற்கு மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.