மணமேடையில் திருமணத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த மணப்பெண் : தெரியவந்த காரணம்!!

541

மணப்பெண்..

இந்தியாவில் மணமேடையில் மணப் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், வானபார்தி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளி கிழமை திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுகொண்டிருந்தது.

திருமணத்திற்கு மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வருகை தந்திருந்தனர். முகூர்த்தத்திற்கான நேரம் வந்த போது, மணமகன் திருமண மேடைக்கு வந்து மணப்பெண்ணின் வருகைக்காக காத்திருந்தார்.

அப்போது மண மேடைக்கு மணப்பெண் வந்து அமர்ந்தார். பின்னர் தாலியை எடுத்து உறவினர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று மண மகளின் கழுத்தில் கட்ட மணமகன் சென்றபோது திடீரென, யாரும் எதிர்பாராதவிதமாக மண மேடையில் இருந்து எழுந்த மணப்பெண், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தடுக்க முயன்ற போது, யாருடைய பேச்சையும் கேட்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

இது குறித்து மணமகளின் பெற்றோர், திருமண மேடைக்கு வருவதற்கு முன்பு மண மகள் அவருடைய முன்னாள் காதலனை பார்த்துள்ளதாகவும் அதனால் திடீரென மனம் மாறி திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும்,

தற்போது அந்த இளைஞன் மற்றும் என்னுடைய மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.