விபத்தில்..

அட்டாளைச்சேனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அம்பாறை- அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மேலுமொருவருக்கு கா ல் து ண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாளைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




