நாய்க்குட்டியை தத்தெடுத்த அனுஷ்கா!!

456

Anushka hot Photosதிரிஷா ஏற்கனவே பிராணிகள் நல அமைப்பில் தொடர்பு வைத்து பணிகள் செய்து வருகிறார். வீதியோரம் திரியும் நாய்களை பிடித்து கழுவி சுத்தப்படுத்தி தத்தெடுத்து வருகிறார்.வீட்டிலும் நிறைய நாய்கள் வளர்க்கிறார்.

தற்போது நடிகை அனுஷ்காவும், பிராணிகள் நல அமைப்பில் இணைந்துள்ளார். ஐதராபாத்தில் பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பும் பிராணிகளுக்கான உணவு தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கருத்தரங்கு நடத்தி, இதில் நாய் கண்காட்சி, நாய்கள் தத்தெடுக்கும் நிகழ்ச்சி போன்றவை நடந்தன.

இதில் அனுஷ்கா பங்கேற்று நாய்க்குட்டியொன்றை தத்தெடுத்தார்.
விழாவில் அனுஷ்கா பேசும் போது எனக்கு பிராணிகளை மிகவும் பிடிக்கும். பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்புடன் தொடர்பு வைத்து பல்வேறு பணிகள் செய்து வருகிறேன். மனித வாழ்க்கையில் மிகவும் நேசத்துக்கு உரியவைகளாக அவைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும் என்றார்.