விமானத்தில் தும்மியபடி இருந்த பயணிக்கு நேர்ந்த கதி!!

476

விமானத்தில்..

அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி கடுமையான ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு தும்மிய நிலையில் கொரோனா பீதியில் அவர் அருகில் உள்ள இருக்கைகளில் யாரும் உட்காராத புகைப்படம் வைரலாகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் நடாஷா லீ என்ற இளம்பெண் பத்திரிக்கையாளராக உள்ளார். நடாஷா டுவிட்டரில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், என் கணவர் மலேசியாவை சேர்ந்தவர், அவர் மெல்போர்னில் இருந்து கிளம்பிய விமானத்தில் பயணம் செய்ய இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு ஜலதோஷம், தும்மல் ஏற்பட்டது, ஆனால் அவர் உடல் நலம் பாதிக்கவில்லை.

அதன் காரணமாக அவரின் அருகில் இருந்த இருக்கையின் வரிசைகள் முழுவதும் காலியாகவே இருந்தன என பதிவிட்டுள்ளார்.

அதாவது ஜலதோஷம், தும்மலும் கொரோனாவின் ஒரு அறிகுறி என்பதால் பீதியில் எந்தவொரு பயணியும் நடாஷா கணவர் அருகில் உட்காரவில்லை என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.