கொரோனா வைரஸ் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!!

481

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸினால் சீனாவில் நாளாந்தம் பாதிப்புக்கு உள்ளாவோர் தொகை குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் 87 நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது வரை இந்த தொற்றினால் 3311 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் சீனாவில் மாத்திரம் ம ரணமானவர்களின் எண்ணிக்கை 3013 ஆகும். 96 ஆயிரம் பேர் இதுவரை கொரேனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றினால் பாதிக்கப்பட்ட 53 ஆயிரம் பேர் சிகிச்சையளிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சர்வதேச ரீதியாக 1800 பேர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.