மன்னார் – மதவாச்சி வீதிக்கு இன்று பூட்டு!!

275

Road closedமன்னார் – மதவாச்சி ஏ-14 பிரதான வீதி இன்று (26) தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி முற்பகல் 10.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் குறித்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மன்னார் – மதவாச்சி வீதியின் 24ம் மற்றும் 60ம் கட்டைகளுக்கு அருகில், பிரதான வீதியை ஊடறுத்து ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.