வீட்டில் சடலமாக கிடந்த நடிகர் ஆனந்த்ராஜின் உடன்பிறந்த தம்பி : சி க்கிய 4 கடிதங்கள்!!

463

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக மி ரட்டல் காரணமாக அவர் உ யிரை மா ய்த்துக் கொண்டதாக ஆனந்த்ராஜ் கூறியுள்ள நிலையில் பல்வேறு அ திர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள நடிகர் ஆனந்தராஜின் உடன்பிறந்த இளைய சகோதரர் கனகசபை (55).

புதுச்சேரியில் திருமுடி நகரில் வசித்து வந்தார். வியாழன் காலை வீட்டில் வி ஷம ருந்தி த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் ச டலமாக மீட்கப்பட்டார்.

வட்டிக்கு கடன் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு தொழில்களில் கனகசபை பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார்.

உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சென்னை, பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் பலரும் இவரது ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

பணமதிப்பிழப்பு காலகட்டத்தின் போது சிலர் இவரிடம் இருந்து 8 கோடி ரூபாயை மாற்றித் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி, விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களுக்கு அரிசி ஆலை தொடங்குவதற்கு, கனகசபை பல கோடி ரூபாய் கடன் கொடுத்த நிலையில் அந்தப் பணம் திரும்பி வரவில்லை.

வேறு சில பிரச்னைகளாலும் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் அளவுக்கு கனகசபை பணம் கொடுக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கனகசபை த ற்கொ லை செய்து கொண்டார்

அவரது த ற்கொ லை பற்றி அறிந்த வாடிக்கையாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டிற்கு வந்த நடிகர் ஆனந்தராஜையும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு விளக்கம் அளிக்கும்படி கேட்டனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஆனந்தராஜ், கனகசபை 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளதாகவும் அவற்றில் சிலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், கடன் பி ரச்னையால் தனது தம்பி த ற்கொ லை செய்யவில்லை என்றும் அவருக்கு சிலர் மி ரட்டல் விடுத்ததே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்

கனகசபையின் த ற்கொ லைக்குப் பின்னால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது தழுதழுத்த குரலில், அரசியல்வாதிகள் நம்மை விட புத்திசாலிகள் என்றார் ஆனந்தராஜ்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் கடிதங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற தகவல்களை வெளியிடவில்லை.

இதனிடையில் கனகசபை எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தில் சொந்த சகோதரரே வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு மி ரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்பி த ற்கொ லைக்கு சிலரது மி ரட்டலே காரணம் என்று வெளிப்படையாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், அதில் அமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது பெயரும் இடம் பெற்றுள்ளதாக ச ர்ச்சை வெ டித்துள்ளது.