கொரோனா வைரஸ்
உலகில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றன. தற்போது வரை எந்த ஒரு புதிய மருத்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை சீக்கிரம் தாக்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் நாம் நம்முடைய உணவு நோய் எதிர்சக்தி அதிகம் கொண்ட காய்களை சேர்த்து கொள்ள வேண்டும். அது தவிர சில மூலிகைகளும் இருக்கின்றன.
அத்துடன் வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். குறிப்பாக சில மூலிகைகளை அதிகம் உட்கொண்டு வந்தால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால், அந்த மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.
கற்பூரவள்ளி : புதினா குடும்பத்தைச் சேர்ந்த கற்பூரவள்ளி இலைகளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இதில் உள்ள தாவர வகை பொருளான கார்வாக்ரோல் ஆன்டி-வைரல் பண்புகளை வழங்குகின்றன. எனவே நற்பதமான கற்பூரவள்ளி இலையை காலையில் எழுந்ததும் நீரில் கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.
துளசி : துளசியில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகைகளிலும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. துளசியை ஒருவர் அன்றாடம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, கிருமி தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.
சோம்பு : சமையலில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் சோம்பு குறிப்பிட்ட வகை வைரஸ்களை எதிர்த்துப் போராடக்கூடியது. ஆய்வு ஒன்றில், சோம்பு நோயெதிர்பபு மண்டலத்தை வலிமைப்படுத்தி, வைரஸ் தொற்றுகளால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. எனவே உடலில் ஆன்டி-வைரல் சக்தியை அதிகரிக்க, சோம்பை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுங்கள்.
பூண்டு : பூண்டு மிகவும் பிரபலமான, பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சமையல் பொருளாகும். இந்த பூண்டு பல வகைகளில் உடலுக்கு நன்மை புரிகிறது. குறிப்பாக மற்ற பொருட்களை விட, பூண்டில் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமாக உள்ளது. மேலும் இது ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். ஆகவே உங்கள் அன்றாட உணவில் பூண்டு சேர்க்க தவறாதீர்கள்.
புதினா : புதினாவில் சக்தி வாய்ந்த ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இந்த புதினாவை ஒருவர் டீ போன்றோ அல்லது சமையலில் சேர்த்தோ உட்கொள்ளலாம்.
அதிமதுரம் : பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் அதிமதுரம் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரத்தில் கிளைசிரைசின், லிகுரிடிஜெனின் மற்றும் கிளாபிரிடின் ஆகியவை சக்திவாய்ந்த ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்ட சில பொருட்கள் உள்ளன. தற்போது கொரோனா வைரஸிற்கு கூட சீனாவில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இஞ்சி : மருத்துவ குணம் கொண்ட மற்றொரு மூலிகைப் பொருள் தான் இஞ்சி. இதில் பல்வேறு சக்தி வாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமான அளவில் உள்ளன. கூடுதலாக, இஞ்சியில் உள்ள குறிப்பிட்ட சேர்மங்களான ஜின்ஜெரோல் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை வைரஸ் நகலெடுப்பைத் தடுக்கின்றன மற்றும் வைரஸ்கள் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.