யாழில்..

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒ ருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இந்த த ற்கொ லை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த 35 வயது சுரேஸ் என்பவரே இவ்வாறு த ற்கொ லை செய்துக் கொண்டுள்ளார்.

உ யிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் நிலையத்தில் பா துகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம், ம து போ தையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், கடந்த 05ம் திகதியும் த ற்கொ லை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து கா ப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ம து போ தையில் தண்டவாளத்தில் படுத்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

யாழ். நீதிவான் சென்று ச டலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




