வவுனியாவை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!!

626

வன்னித் தேர்தல் தொகுதி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3 தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 287013 பேர் வாக்களிக்களிப்பதற்காக 353 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 119811 பேர் வாக்களிப்பதற்காக 141 பேரும் மன்னார் மாவட்டத்தில் 88842 பேர் வாக்களிப்பதற்காக 76 வாக்களிப்பு நிலையங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 78360 வாக்களிப்பதற்காக 136 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக இதுவரை 3 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.