எச்சரிக்கை : கழிவறையில் தொலைபேசியை பயன்படுத்தினால் கொரோனாவுக்கு அதிக வாய்ப்பு!!

994

கொரோனா வைரஸ்

மொபைல் போன்களை கழிப்பறையில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்று நோயாக மாறி வருகிறது. மனிதர்களிடமிருந்து பரவும் இந்த நோய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், கையை சுத்தம் செய்யாமல் அந்த பொருளை தொட்டால், அது குறித்த பொருளில் பரவி, அதன் பின் அந்த பொருளை தொடும் நபருக்கும் பரவும் நிலை உள்ளது.

இதன் காரணமாக அடிக்கடி 20 நிமிடங்களுக்கு ஒருதடவை கைகளை கழுவும் படி அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மொபைல் போன்களை கழிப்பறையில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்கெட்டிங் ஏஜென்சியான Jellybean நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் 54 சதவீதம் பேர் மொபைல் போன்களை கழிப்பறைக்கு எடுத்து செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு, பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக மொபைல் போன்கள் வைத்திருப்பர்.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் அந்த மொபைல் போன்களை தொடும் போது, அந்த திரையில் சுமார் 9 மணி நேரம் கொரோனா தங்குவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதன் காரணமாக அடுத்த முறை நீங்கள் தொலைப்பேசியை பயன்படுத்தும் போது, உங்களை தவிர வேறு யாரேனும் பயன்படுத்தியிருந்தால் நிச்சயமாக கை கழுவுவது நல்லது, இது மிகவும் கடினம். ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு இதை செய்வது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் கேவில் கூறுகையில், நீங்கள் கைகளை கழுவலாம், ஆனால் உங்கள் ஸ்மார்ட்போன் திரையைத் தொடத் தொடங்கினால், உங்கள் முகத்தைத் தொட்டால் அது தொற்று நோய்க்கான பாதையாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

லிவர்பூல் Human Biology and Biological Sciences பல்கலைக்கழகத்தின் அறிவியல், விரிவுரையாளர் மருத்துவர் பெர்பூட்ட எமகை, இந்த வைரஸ் மனித கழிவில் மிக நீண்ட காலம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கழிப்பறைக்கு சென்றுவிட்டு, சுத்தப்படுத்தி விட்டு வந்தாலும், அங்கு கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா,வைரஸ் போன்றவை ஒளிந்திருக்கும்.

அப்படி நாம் அங்கு கழிப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தினோம் என்றால், அதில் இருந்து வெளிவரும் சில துகள்களை வெளியிடும் போது, அவை கழிவறையில் பரவி அதன் பின், வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களாக மறலாம்.

இதன் மூலம் கொரோனா பரவலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் பரவலுக்கு கழிவில் இருக்கும் துகள்களில் உண்மையான ஆபத்து இருப்பதாக கூறப்படுவதால், கொரோனா பீதி அடங்கும் வரை மொபைல் போன்களை கழிவறையில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.