அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
அம்பலாங்கொட பகுதிக்கு அருகில் உள்ள கடலில் அமைந்திருக்கும் ஜென்டவன மலைக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவர், ஆமைகள் தொடர்பில் கல்வி சுற்றுலா நிமித்தமே குறித்த கடலுக்கு சென்றுள்ளார். இதன்போது அவர் தம்முடன் வந்தவர்களிடம் இருந்து பிரிந்து தனித்திருந்த வேளையிலேயே இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.
இவருடன் குறித்த சுற்றுலாவில் 8 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தநிலையில் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





