2 நாட்களில் இந்து முறைப்படி நடக்கவிருந்த திருமணம் : இத்தாலிய ஜோடியின் கனவை தகர்த்த கொரோனா!!

637

இத்தாலிய ஜோடி

இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்த இத்தாலிய ஜோடியின் திருமணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஆண்ட்ரியா பெல்லி (56) மற்றும் அன்டோனெல்லா ஸ்கானோ (50) என்கிற ஜோடி கடந்த 20 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட தம்பதியினர் கடந்த 3ம் திகதியன்று இந்தியாவின் ஜெய்ப்பூர் மாநிலம் வந்தடைந்தனர்.

திருமணம் 7ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் திருமணத்திற்கான இடம், ஒரு இசை இசைக்குழு, சுமார் 150 விருந்தினர்களுக்கு இரவு உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு, 2 நாட்களாக அங்கேயே தங்கியிருந்து திருமணத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கியுள்ளனர்.

பின்னர் 5ம் திகதி ராஜஸ்தான் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, உடனடியாக டெல்லிக்கு திரும்பி இத்தாலிய தூதரகத்தை சந்திக்குமாறு மாநில அரசிடம் இருந்து தம்பதியினருக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த தம்பதி வேறு வழியில்லாமல் திருமணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், ராஜஸ்தான் அரசின் உத்தரவு திரும்ப பெறப்பட்டதோடு, தகவல் தொடர்பு காரணத்தால் தவறு நடந்து விட்டதாக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அதிகாரிகளின் கவனக்குறைவால் திருமணம் நின்றுபோனதை நினைத்து தம்பதியினர் பெரும் வே தனையடைந்திருப்பதாக போர்த்துகீசிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பெல்லியின் சகோதரி பாவோலா பெல்லி கூறியுள்ளார்.