வவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!!

6


மகளிர் தினம்


வடமாகாண மகளீர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடாத்தும் சர்வதேச மகளீர் தினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (10.03.2020) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் ‘அனைவரும் சமம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,


வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மற்றும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,


அரசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பெண்கள், பொதுமக்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மகளீர் அமைப்புக்களுடைய உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, விற்பனைக்கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் நடன ஆசிரியர் சூரிய யாளினி அவர்களின் நெறியாள்கையில் கீழ் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

அதன் பின்னர் தலைமையுரை , சிறப்பு விருந்தினர் உரை என்பன இடம்பெற்றதுடன் மாகாணமட்ட பெண் தொழில் முயற்சியார்களுக்கான பரிசில்கள் , குத்துச்சண்டை வீராங்கணைகளை கௌரவித்தல் , மகளீர் மகுடம் உதவி வழங்கல் , மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு என்பனவும் இடம்பெற்றிருந்தது.