பேஸ்புக் காதலனை காண தமிழகம் சென்ற இலங்கைப் பெண் மாயம்!!

292

இலங்கைப் பெண்..

பேஸ்புக் மூலம் பழக்கமாகி இளைஞரை காதலித்த இலங்கை பெண் சென்னைக்கு வந்த நிலையில், கா ணாமல் போன அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு தந்தை புகார் அளித்துள்ளார்.

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் சமகிபுரவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். இவர் குவைத்தில் வேலை பார்க்கிறார். இவர் மகள் ரிஸ்வி பாத்திமா குப்தா (21).

இவருக்கும் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் (25 ) என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் முகமது வேலை பார்க்கும் நிலையில் அடிக்கடி பேஸ்புக் மூலம் ரிஸ்வியுடன் பேசிய நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதற்கிடையே ரிஸ்வி, முகமதை நேரில் சந்திக்க ஆசைப்படுவதாக கூற அவரை முகமது சென்னைக்கு வர சொன்னார்.

அதன்படி ரிஸ்வி கடந்த 26ம் திகதி சுற்றுலா விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். அங்கு காதலனை சந்தித்த நிலையில் இருவரும் பண்ருட்டி வந்தனர்.

இந்த தகவல் ரிஸ்வியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அ திர்ச்சி அடைந்த அவர்கள் குவைத்தில் இருந்து அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் த.மு.மு.க அமைப்பினர் உதவியின் மூலம் ரிஸ்வின் தந்தை ஜெயினுலாபுதீன் கடலூர் பொலிசில் க ண்ணீருடன் மனு அளித்தார்.

அதில் தனது மகளை க ண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன்படி பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிக்குப்பம் கிராமத்துக்கு சென்று பார்த்த போது காதல் ஜோடி அங்கு இல்லை. இதை தொடர்ந்து இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.