கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்!!

1115

பாட்டி வைத்தியங்கள்

பொதுவாக இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

அதுமட்டுமின்றி புதிய புதிய வைரஸ் தோற்றம் பெற்று நமது உ யிரை ப றிக்கும் அளவிற்கு மாறிவிட்டது. இதற்கு முழு காரணம் நோயெதிர்ப்பு சக்தி இல்லாதது தான். அவற்றில் இன்று உலகம் முழுவதும் பேசும் பொருளாக கொரோனா வைரஸ் மாறிவிட்டது.

இந்த வைரஸ் பரவி வரும் நேரத்தில் அன்றாடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால், எளிதில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, கொரோனா வைரஸ் தா க்கத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பா துகாக்கும் சில பாட்டி வைத்தியங்களைக் காண்போம்.

1/2 டீஸ்பூன் நற்பதமான நெல்லிக்காய் பேஸ்ட்டை, நன்கு அரைத்த 1 பூண்டு பல்லுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் பலவீனமான ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் சீக்கிரம் வலுபெறும்.

வேப்பிலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால், நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரிக்கும்.

இஞ்சி மற்றும் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயில் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எ திர்த்துப் போ ராடும் பண்புகள் அதிகம் உள்ளது. இந்த டீயை தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும்.

ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து தினமும் குடியுங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இயற்கையாக வலுபெறும்.

நற்பதமான இஞ்சியைக் கொண்டு சாறு எடுத்து, அதில் சிறிது துளசி இலையின் சாற்றினையும் சேர்த்து கலந்து, அத்துடன் தேன் கலந்து உட்கொள்ளுங்கள். இப்படி தினமும் குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 5-7 துளசி இலையுடன், 2 மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். முக்கியமாக இதை சாப்பிட்ட 1/2 மணிநேரத்திற்கு தண்ணீர் பருகக்கூடாது. இப்படி உங்களின் தினத்தை இவ்வாறு ஆரம்பித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு டீஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் வெல்லம், 1 டீஸ்பூன் பசு நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் சுக்கு/ காய்ந்த இஞ்சிப் பொடி சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டையாக பிடித்து, தினமும் 2-3 முறை உட்கொள்ள வேண்டும். இதனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும்.

ஒரு டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அதுவும் தினமும் இரவு தூங்குவதற்கு 20-30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.