7 ஆண்டுகள் காதல் : இளைஞனை திருமணம் செய்ய தயாரான பெண்ணுக்கு வந்த அதிர்ச்சித் தகவல்!!

557

7 ஆண்டுகள் காதல்..

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை வருடக்கணக்கில் காதலித்த போதே வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் குளித்தலையை சேர்ந்தவர் தேவி (30) மாற்றுத்திறனாளியான இவர் குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். குழந்தைகள் காப்பகத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (31) என்பவர் அன்னதானம் வழங்க அடிக்கடி வருவார்.

அப்போது தேவியிடம் அவர் ரூபாய் 70 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருந்த இந்தப் பழக்கம் மெல்ல காதலாக மாறியதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கண்ணன் அதற்கான ஏற்பாட்டை செய்யச்சொல்லி தேவி குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2ம் திகதி திடீரென திருமணத்தை நிறுத்துமாறு கண்ணன், தேவிக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்ப அதை பார்த்த அவர் அ திர்ச்சியடைந்தார்.

இதையடுத்து கண்ணன் மீது ச ந்தேகப்பட்டு அவர் பற்றி தேவி‌ விசாரிக்கும் போது கண்ணனுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருப்பது தெரியவந்தது.

மேலும் கண்ணன் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோ சடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தேவி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.