இலங்கையில் வசிக்கும் குறவர்கள் மற்றும் பாம்பாட்டிகளுக்கு விசேட அடையாள அட்டை!!

828

kuravarkalஇலங்கையில் வசிக்கும் குறவர்கள் மற்றும் பாம்பாட்டிகளுக்கு விசேட அடையாள அட்டையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனவளம் மற்றும் வன விலங்குகள் தொடர்பான அமைச்சர் விஜித முனி சொய்சா தெரிவித்தார்.

இதன் மூலம் குறவர் இன மக்களின் கலாசாரம் மற்றும் செயற்பாடுகளை பாதுகாப்பது இலகுவாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.