வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை தடுத்து வைக்க விசேட சிறைப் பிரிவு!!

458

சிறைப் பிரிவு..

பல்வேறு கு ற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விமான நிலையம் மற்றும் வேறு இடங்களில் கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை தடுத்து வைக்க அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட சிறைப் பிரிவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் சிறைச்சாலைக்குள் பரவுவதை தடுப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறைப்பிரிவில் தடுத்து வைத்து அவர்களை க ண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து சிறைச்சாலை அத்தியட்சகர்கள் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக எடுக்க வேண்டிய அவச நடவடிக்கைகள் அடங்கிய ஆலோசனைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த கைதிகளை தனிமைப்படுத்தி க ண்காணிப்பதற்காக தேவையான மேலதிக வசதிகள் சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.