சவூதி அரேபியா

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான பயணங்களை தடை செய்ய சவுதி அரேபியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலைமைக்கு மத்தியில் சவுதி அரேபியா இந்த தடையை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் நோக்கில், தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அதற்கமைய அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட 12 நாடுகளில் முன்னெடுக்கப்படும் விமான பயணங்கள் அனைத்தையும் தற்காலிகமாக தடை செய்வதற்கு சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், சூடான், சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கே சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.




