கொரோனா வைரஸ் தொற்று : உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை!!

519

கொரோனா வைரஸ்..

உடற்பயிற்சி நிலையங்களே கொரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்தை கொண்ட இடங்களாக கருதப்படுவதாக வெளிநாட்டு செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.

வியர்வை மற்றும் உடலின் ஈரப்பதம் என்பன கிருமிகளின் பரவலை அதிகரிக்கும் என்றும் அந்த செய்திசேவை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய சுகாதார சேவையினர் இது தொடர்பில் அறிவுரைகளை விடுக்கவில்லை. எனினும் மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஈரப்பதன் உள்ள இடங்களில் பரவும் ஆற்றலைக்கொண்டிருப்பதால் ஜிம்ஸ் என்ற உடற்பயிற்சி நிலையங்கள் அதன் பரவலுக்கான வாய்ப்பை கொடுக்கும் என்று பிரித்தானிய ஊடகவியலாளரும், வைத்தியருமான நோர்மன் ஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.