நயன்தாராவுக்கு தாலி கட்டத் தயாராகும் சிம்பு!!

489

Simbu

நயன்தாராவுக்கு சீக்கிரமே தாலி கட்டப் போகிறார் சிம்பு. இது நிஜத்தில் நடக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால் சினிமாவில் நடக்கவிருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு இந்து முறைப்படி சிம்பு தாலி கட்டுவது போன்ற காட்சியை எடுக்கிறார்களாம்.

ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் சர்ச்சில் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டு, அதையே நயன்தாரா – ஆர்யா திருமணம், முதலிரவு என்றெல்லாம் பப்ளிசிட்டி செய்து பரபரக்க வைத்தார்கள்.

இந்த முறை, சேச்சுக்கு பதில் இந்து கோவில் ஒன்றில் சிம்பு – நயன் திருமண காட்சியை எடுக்கப் போகிறார்களாம். அனுமதி கிடைக்காவிட்டால் செட் போட்டு படமாக்கத் திட்டமாம். சிம்புவும் நயன்தாராவும் முன்னாள் காதலர்களாக இருந்து, ஒரு பெரிய சண்டை – பிரிவுக்குப் பிறகு இப்போது திரையில் மட்டும் இணைந்துள்ளனர்.