இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள் : கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்துமாம்!!

848


கொரோனா வைரஸ்..இன்று உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது.கொரோனா வைரஸை குறித்து செய்திகள் பரவியதும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியிருக்கும் போது நம்மை அறியாமாலே சில தவறுகளை செய்து விடுகின்றோம்.
இது நோயின் தீவிரத்தை அதிகரிப்பதோடு அடுத்தவருக்கும் எளிதாக அதைப்பரப்பி விடுகின்றோம். எனவே அந்த தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொண்டாலே போதும் இந்த வைரஸிடம் நம்மை மட்டுமின்றி நம்முடன் இருப்பவர்களையும் பா துகாத்து கொள்ள முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.


தீவிர அறிகுறி தென்பட்டாலும் மருத்துவரை அணுகாமல் இருப்பது : காய்ச்சல், இருமல் , தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அதிக காய்ச்சல், உடல் பலவீனம், மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் தென்பட்டாலோ மருத்துவரை அணுகாமல் இருப்பதும் பிறருடன் பழகாமல் தனித்து இருப்பதைத் தவிர்ப்பதும் பெரும்பாலானர்கள் செய்யும் தவறு.

செல்லப்பிராணிகளுடன் கூட நெருங்கிப்பழக கூடாது : செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது, அணைத்துக்கொள்வது, முத்தம் கொடுப்பது, நோயாளியின் எச்சில்பட்ட உணவை அவற்றுக்குக் கொடுப்பது போன்ற செயல்களையும் தவிர்க்கவேண்டும்.


தவறான தகவல்களை நம்ப கூடாது : சமூகவலைத்தளங்கள் மற்றும் இணைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி நோயின் தீவிரத்தை உணராமல் இருப்பது தவறான விஷயம்.

நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவங்கள் முயற்சி செய்ய கூடாது : பூண்டு சாப்பிட்டால் கொரோனாவைத் தடுக்கலாம், பசுவின் சாணத்தை எரிப்பதால் வரும் புகை கொரோனா வைரஸை அழிக்கும் என்பன போன்ற அறிவியல் பூர்வாக நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவங்கள் முயற்சி செய்து பார்ப்பது நிலைமையை மேலும் மோசாமாக்குமே தவிர சீராக்காது.

தனிநபர் சுகாதாரம் சார்ந்த விஷயங்களைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது : அறிகுறிகள் இருந்தால் வீட்டில் தனிமையில் இருத்தல், பிறருடன் நெருங்கிப் பழகாமல் தவிர்த்தல், கண்கள், வாய் , மூக்கு போன்ற தொடுவதைத் தவிர்த்தல், இருமும் போதும் தும்மும் போதும் வாயை முடிக்கொள்ளுவதல் போன்ற தனிநபர் சுகாதாரம் சார்ந்த விஷயங்களைப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது. இது அந்த நபரை மட்டுமின்றி, உடனிருப்பவர்களுக்கும் ஆ பத்தாக முடியும்.