திருமணத்தின் போது வங்கதேச வீரர் அணிந்த உடையால் ச ர்ச்சை : சிறையில் அடைக்கப்படுவாரா?

16


சவுமியா சர்க்கார்..


வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரரான சவுமியா சர்க்கார் திருமணத்தின் போது பயன்படுத்திய உடை காரணமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான Soumya Sarkar கடந்த 26-ஆம் திகதி Prionti Debnath Puja என்ற 19 வயது பெண்ணை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் அங்கிருக்கும் Khulna Club-ல் நடைபெற்றுள்ளது.


அப்போது திருமணத்தின் திடீரென்று செல்போன்கள் காணமல் போனதால், பிரச்சனை ஏற்பட்டு, பொலிசார் வந்த பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திருமணத்தின் காரணமாக சவுமியா சர்க்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.


அதாவது குறித்த திருமணத்தின் போது சவுமியா சர்க்கார் மான் தோலால் ஆன உடை பயன்படுத்தியதல், இது சட்டப்படி குற்றம் எனவும் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் அதே சமயம் சவுமியா சர்க்காரின் தந்தை கிஷோரி, இந்த உடை பாரம்பரியம், பாரம்பரியமாக மாற்றப்பட்டு வருகிறது.

எனக்கு என்னுடைய தந்தை கொடுத்தார், நான் இப்போது என்னுடைய மகனுக்கு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே சவுமியா சர்க்கார் சிறையில் தள்ளப்படுவாரா? தப்புவாரா? என்பது தெரியவரும்.