கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் குணமடைந்தார்!!

578

கொரோனா

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை பெண்ணொருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இத்தாலியின் மிலான் நகரில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய முதல் இலங்கையர் இந்த பெண் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.