இலங்கையில் மேலும் 3 பேருக்கு கோரோனோ தொற்று : நோயாளர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!!

612

கொரோனா வைரஸ்..

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் 44 வயதுடைய நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கை வந்தவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரும் 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இத்தாலியில் இருந்து நாடு திருப்பிய நிலையில் கந்தன்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் பொலநறுவை வைத்தியசாலையிலும் மற்றையவர் அங்கொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இரண்டு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனதாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இலங்கையில் பல பகுதிகளில் சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.