கொரோனாவால் இந்தியாவில் முதல் ம ரணம் : சவுதியிலிருந்து நாடு திரும்பியபோது அறிகுறி இல்லையென தகவல்!!

537

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் ம ரணம் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் 76 வயதான ஒருவரே இந்த நோய் தொற்றினால் ம ரணமானமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சவூதி அரேபியாவில் இருந்து கடந்த 29ஆம் திகதி நாடு திரும்பியவராவார்.
இவர் விமான நிலையத்தின் ஊடாக வரும்போது அவருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.

எனினும் கடந்த 5ஆம் திகதியன்று மூச்சுத் தி ணறல் ஏற்படவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.