இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர் : தமிழகத்தில் நடந்த அதிசயம்!!

904

அதிசயம்..

நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் வருகிற 9ம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுவதால் ஏராளமான மக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இயேசு நாதர் கால் விரல்களில் இருந்து நீர் வடிந்தது, இத்தகவல் காட்டுத்தீ போல் பரவவே சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து குவிந்தனர். பலர் அந்நீரை குடித்தும், உடலில் பூசிவிட்டும் சென்றனர், இதனால் அப்பகுதியில் ப ரபரப்பு நிலவியது.