எனக்கு கொரோனா வைரஸ் : இளம் பெண் செய்த மோசமான செயல் : அதன் பின் தெரிந்த உண்மை!!

359


இளம் பெண்..



தமிழகத்தில் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்குவதற்காக தனக்கு கொரோனா இருப்பதாக கூறியது, உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் பீ தியடைய வைத்துள்ளது.



சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் கோயமுத்தூர் சென்ற ஆம்னி பேருந்தில் சுஜிதா என்ற பெண் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்த போது, அவர் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் ஓட்டுனர் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பேருந்தை இயக்கியதால்,




அந்த பெண், திடீரென்று அடுத்து, தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு முன்னர் பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தவே, கீழே இறங்கிய அவர், பின்னால் வந்த தன்னுடைய நண்பரின் காரில் ஏறிச் சென்றார்.

இதையடுத்து, பேருந்தில் இருந்தவர்கள் கொரோனா விழிப்புணர்வு தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளனர். சுங்கச்சாவடி அருகே சுகாதாரத்துறை அலுவலர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் விசாரித்துள்ளனர்.


அப்போது, அனைத்து பயணிகளும், தங்களை பரிசோதனை செய்யுமாறு கேட்டுள்ளனர். இதனை அடுத்து, டிக்கெட் முன்பதிவு பட்டியலின் அடிப்படையில் அந்தப் பெண் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

காவல்துறைக்கும் தகவல் சென்று அவர்கள் விசாரிக்க, அந்தப் பெண் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்டம் படிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, அவரிடம் நேரில் சென்று பொலிசார் விசாரித்த போது, விளையாட்டாக நண்பர்களிடம் சவால் விட்டு அப்படி சொன்னதாக கூறியுள்ளார்.

விளையாட்டுக்காக இப்படி பொதுமக்களை அ ச்சப்பட வைப்பதா என்று அவரை க டுமையாக க ண்டித்த பொலிசார், இனியும் இப்படி யாராவது செய்தால் கு ற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எ ச்சரித்துள்ளனர்.