பூங்காக்களுக்கு பூட்டு
இலங்கையிலுள்ள மிருகக்காட்சி சாலை, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இவை முழுமையாக மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் வழிபாடுகள் நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.