இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு!!

560

இலங்கையில் கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், குறித்த நபர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவருடன் சேர்த்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.