சுகாதார சேவையினருக்கு நாளை அரச விடுமுறையல்ல!!

656

சுகாதார சேவையினருக்கு..

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக நாளைய தினம் அரச மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதும் சுகாதார சேவையினரின் கடமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் சுகாதார சேவையினர் கடமைகளுக்கு செல்ல வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை அரச மற்றும் வர்த்தக விடுமுறை தேவையேற்படின் நீடிக்கப்படலாம் என்று அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் நாளையதினம் கட்டாயம் திறக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுள்ளது.