வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை!!

9


சிறப்பு பூஜை


கொரொனா வைரஸில் இருந்து உலக மக்களைக் காக்க வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (16.03.2020) காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த வழிபாட்டினை சிவசிறி சஞ்சிவி காந்த குருக்கல் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது கொரொனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள மக்களின் நல்வாழ்வுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் ஆலயத்திற்கு வருகை தந்த அனைத்து அடியார்களும் உலக மக்களுக்காக நெய் விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


கொரொனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளவர்களின் நலன் வேண்டி தமிழருவி சிவகுமாரன் , வவுனியா நகரசபை உறுப்பினர் சுமந்திரன் , சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவகஜேந்திரகுமார் , வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் திருக்கேதீஸ்வரன் ஆகியோரின் விசேட கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தது.