மீண்டும் முதலிடத்தை இழந்த இந்திய அணி!!

474

Indஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஏற்கனவே அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றி உள்ள நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

118 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 117 புள்ளிகளுடன் இந்திய அணி 2ம் இடத்திலும் நீடிக்கிறது.
3ம் இடத்தில் தென் ஆபிரிக்கா(110), 4ம் இடத்தில் இங்கிலாந்து அணிகள்(109) நீடிக்கின்றன.

இப்பட்டியலில் இந்திய அணி மீண்டும் நம்பர்1 இடம் பிடிக்க, நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டிலும் வெற்றி பெற்றால் 118 புள்ளிகளுடன் இந்திய அணி மீண்டும் 1ம் இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கும், இரண்டு போட்டியிலும் தோல்வி கண்டால் 115 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடரும்.