அழகிரிக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு : கலக்கத்தில் திமுக!!

587

Alagiriமுன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த அவரை வி்மான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து வரவேற்றுள்ளனர்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்குப் புறம்பாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காகவும் மு.க.அழகிரியை தற்காலிகமாக கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை மூலம் அறிவித்த பின்னர் நேற்று முன்தினம் முதல் முறையாக அழகிரி மதுரைக்குச் சென்றார்.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் பிரமாண்டமான முறையில் வழியனுப்பு நடத்தினர். அதேபோல மதுரைக்குப் போய்ச் சேர்ந்த அழகிரிக்கு, விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழக்கமாக தன்னை வரவேற்பவர்களை அமைதியான முறையில்தான் அழகிரி எதிர்கொள்வார். ஆனால் நேற்று முற்றிலும் வித்தியாசமாக, தன்னை வரவேற்க வந்திருந்தவர்களைப் பார்த்து அவர் புன்னகை தவழும் முகத்துடன் கைகளை ஆட்டியது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. வாழ்த்து கோஷம் விண்ணைத் தொட்டது.

பின்னர் வெளியே வந்த அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்காக திரண்ட ஆதரவாளர்கள் என் நன்றிகள், வழக்கம் போல் இந்த வருடமும் என் பிறந்தநாள் விழா நடைபெறும் என்றும் இந்த வருடமும், பிறந்த நாள் விழாவில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.