சிகிச்சைக்காக கேரளா செல்லும் ஹன்சிகா!!

461

Hansika

ஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உள்ளனர். தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டுவிட்டரில் கூறியிருந்தார்.

இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லையாம். இதனால் சினிமா நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற ஹன்சிகா முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக விரைவில் அவர் கேரளா பறக்க உள்ளாராம். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால உடனே கேரளா செல்ல முடியவில்லை. அவரது பயணம் தொடர்ந்து தள்ளிப்போகிறது.

ஆனால் எப்படியும் அடுத்த மாதம் அவர் சிகிச்சைக்காக கேரளா சென்றுவிடுவார் என ஹன்சிகாவுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். ஹன்சிகா கேரளாவில் சில நாட்கள் தங்கியிருப்பதை அறிந்ததும் மல்லுவுட் இளம் நாயகர்கள் குஷியாகி உள்ளனர்.

அவரை எப்படியும் தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்புகிறார்களாம். இதனால் ஹன்சிகா கேரளா வந்ததும் சில தயாரிப்பாளர்கள் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.