கொரொனா வைரஸ் – பிரித்தானியாவில் 20000 பேர் உ யிரிழக்கும் ஆபத்து!!

689

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் 20 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உ யிரிழக்கும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான சமூக ஆய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் Sir Patrick Vallance தெரிவித்துள்ளார்.

அ ச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் சுமார் 55,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதன் விளைவாக 20,000 மக்கள் உ யிரிழக்க நேரிடலாம் என அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சமூக திட்டங்களை மீறி சுகாதார சேவை பாரிய அளவில் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாரிய இ றப்புகளை சந்திக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த விடயம் சுகாதார துறைக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.