டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்தாரம்!!

580

Abuseபுதுடெல்லியில் 28 வயது இளம் பெண் தனது ஆண் நண்பரால் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பெண் ஆனந்த் வீர் பஸ் நிலையம் அருகே வீதி ஓரத்தில் இருந்து அழுதுள்ளார்.

அப்போது அவர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பெண் தன்னை நண்பர் ஒருவர் ஓடும் காரில் பலாத்காரம் செய்துவிட்டார் என்று கூறியுள்ளார். இரண்டு நண்பர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெண்ணை பொலிசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தான் மறுத்த போது என்னை வாலிபர்கள் அடித்து,உதைத்தனர் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.