மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் ரகசியமாக இத்தாலிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியருக்கு கொ ரோனா!!

768

மனைவிக்கு தெரியாமல்..

மனைவியிடம் வேலை விடயமாக செல்வதாக கூறிவிட்டு, காதலியுடன் ரகசியமாக இத்தாலிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர் ஒருவருக்கு கொ ரோனா தொற்று பரவியுள்ளது.

பெயர் வெளியிடாத அந்த 30 வயது பிரித்தானியர், தனது மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு காதலியுடன் இத்தாலிக்கு சென்றுள்ளார்.

காதலியுடன் ஜாலியாக இத்தாலியில் சுற்றி விட்டு யாருக்கும் தெரியாமல் நல்ல பிள்ளை போல் பிரித்தானியா திரும்பிவிட்டார் அவர்.

ஆனால் அவருக்கு திடீரென கொரோனா அறிகுறிகள் தோன்றவே, சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆய்வக பரிசோதனையில், அவருக்கு கொ ரோனா வை ரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்களிடம், தான் காதலியுடன் இத்தாலிக்கு சென்றது குறித்து தெரிவித்துள்ளார்.

(ஆனால், அந்த காதலி யார் என்றோ, அவர் பெயர் என்னவென்றோ அவர் மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை) தன் கணவர் தனக்கு துரோகம் செய்ததால்தான், அதாவது, தனக்குத் தெரியாமல் காதலியுடன் இத்தாலிக்கு சென்றதால்தான் அவருக்கு கொ ரோனா தொற்று பரவியது என்ற உண்மை தெரியாமலே, அவரது மனைவி தன்னைத்தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.