வவுனியா தாண்டிக்குள வீதியோரத்தில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு!!(படங்கள்)

348

வவுனியா, மருக்காரம்பளையில் வீதி திருத்தப்பணியின்போது பழங்காலத்து நாணயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

தாண்டிக்குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராமத்தில் வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே சுமார் 120 பழங்காலத்து நாணயங்கள் மீட்கப்பட்டன.

மண் பானையொன்றில் காணப்பட்ட இந் நாணயங்கள் எக்காலத்துக்குரியவை என்பதனை அறிவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர மேற்கொண்டுள்ளார்.

சுமார் இரண்டு அடி தாழ்ப்பத்தில் வீதியோரத்தில் காணப்பட்ட இந் நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டு காணப்பட்டதுடன் சேதமடையாத நிலையில் காணப்பட்டது.

கனரக இயந்திரம் மூலம் கால்வாய் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் இந் நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த பானை உடைந்து காணப்பட்டதுடன் அதனுள் இருந்த நாணயங்களும் சிதறிக்காணப்பட்டது.

இதேவேளை அங்கிருந்து அகற்றப்பட்ட மண் வேறோர் இடத்தில் கொட்டப்பட்டு வருவதனால் மேலதிக நாணயங்கள் மண்ணோடு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டிருந்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயகுமார், கிராமசேவகர் எஸ்.உமாபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேற்படி பழங்காலத்து நாணயங்களை மீட்டு ஆய்வுக்காக பாதுகாப்பாக எடுத்துச்சொன்றனர்.

22 23 24