இலங்கையில் கொரோனா தொற்றினால் 81 வீதமான ஆண்கள் பாதிப்பு!!

254

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 81 வீதமானோர் ஆண்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது

அத்துடன் தொற்றாளர்களில் 45.2 வீதமானோர் 41வயதுக்கும் 50வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

இந்தநிலையில் இலங்கையில் தற்போதைய நிலையில் முகக்கவசங்களை பொதுமக்கள் அணியவேண்டிய அவசியம் இல்லை.

எனினும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், அண்மையில் சத்திரசிகிச்சைகளுக்கு உட்பட்டவர்கள், விசேட சுகாதார தேவையுடையவர்கள் முகக்கவசத்தை அணியலாம் என்று சுகாதார அமைச்சின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

பயணம் செல்லும்போது முகக்கவசங்களை அணியலாம். அதேநேரம் பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்களை தவிர்ப்பது சிறந்தது.

இதேவேளை கைககளை அடிக்கடி கழுவுதல், முகத்தையும் மூக்கையும், வாயையும் தொடுதலை தவிர்த்தல் போன்றவையும் பாதுகாப்பான ஏற்பாடுகளாக இருக்கும்.

இந்தநிலையில் காய்ச்சல், இருமல், தொண்டை ஸ்தாபிதம், மூச்சு எடுக்க முடியாமை போன்ற குணங்குறிகள் தென்பாட்டால் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

உங்கள் பிரதேசத்துக்கு கடந்த 15நாட்களுக்குள் எவராவது வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தால் அவர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.