இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி!!

492

NZஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ஷிகர்தவான், சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டு பின்னி, மற்றும் ராயுடு சேர்க்கப்பட்டனர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா 79, விராத் கோலி 2, ரகானே 3, ராயுடு 37 ஓட்டங்களும் எடுத்தனர்.

கடைசியில் அதிரடியாக ஆடிய டோனி 79 ஓட்டங்களும் ஜடேஜா 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ 2 விக்கெட்டும், மில்ஸ், பெனட், வில்லியம்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

279 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் அபாரமாக விளையாடிய டெய்லர் சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குப்தில் 35, ரைடர் 19, வில்லியம்சன் 60 ஓட்டங்களை எடுத்தனர். டெய்லர் 112, மெக்கல்லம் 49 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதிபடுத்தினர்.

இந்தத் தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் அரைசதம் விளாசியுள்ளார். ஆட்டநாயகன் விருது டெய்லருக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது நியூசிலாந்து அணி .