பிரபல நடிகர் விசு காலமானார்!!

629

பிரபல நடிகரும், இயக்குனருமான விசு(75) இன்று (22.03.2020) உடல்நலக்குறைவினால் காலமாகியுள்ளார்.

இவர் 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம திகதி பிறந்தார். இவரது முழுப்பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்பதாகும். சுருக்கமாக விசு என்று அழைக்கப்பட்டு வந்த இவர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவரும் ஆவார்.

இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் நடித்த முதல் படம் ரஜினியின் தில்லு முல்லு. மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்பு கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குனாராக அறிமுகமாகினார். மேலும் மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. தனது 72 வயது வரை நடிப்பில் அசத்தியது மட்டுமின்றி ரிவி நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கினார்.

உமா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்லாகியுள்ளனர்.

வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக ஓய்வு எடுத்து வந்த விசு, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது இழப்பு தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.